
posted 12th September 2021
வவுனியாவில் 32 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை 69 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 324 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் உயிரிழந்த நால்வருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மாவட்ட இரீதியான கொரொனா தொற்றுகளின் விபரங்கள்;
வவுனியா மாவட்டத்தில் 32 பேர் - வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்.
யாழ்.மாவட்டத்தில் 24 பேர். இதில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 09 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 08 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரலில் ஒருவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்;
முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர்.
வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேர் - கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், இரணைமடு விமானப்படை முகாமில் 03 பேர்.

எஸ் தில்லைநாதன்