
posted 20th September 2021
இளைஞர் விபத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் நீர்வேலிச் சந்திக்கு அண்மித்த பகுதியில் ஞான பைரவர் ஆலயம் முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவருடன் மோதியுள்ளது.
சம்பவத்தின் போது மதில் சுவரில் காணப்பட்ட கம்பி இளைஞரின் மார்பில் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்தார். வீதியில் பயணித்தவர்களால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் உயிரிழந்ததார் எனத் தெரியவந்துள்ளது.
நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) என்பவரே உயிரிழந்தவராவர்.

எஸ் தில்லைநாதன்