
posted 27th September 2021

பணிப்பாளர் த.வினோதன்
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையில், மன்னாரில் 9 கொரோனா தொற்றாளர்கள் கடந்த சனிக்கிழமை (25.09.2021) உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2092 ஆக உயர்ந்துள்ளது. மேலும், எந்தத் தடுப்பூசி என்று பாகுபடுத்தாமல் கிடைத்ததே நல்லது என்று அதை அவர்கள் ஏற்றுக்கொண்டமை பெருமைக்குரியது என்றும் கூறப்பட்டுறள்ளது.
அத்துடன் பணிப்பாளர் த.வினோதன் மேலும் அவரது அறிக்கையில் கூறியதாவது; இத்தொற்றாளர்களில், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவரும், முருங்கன் ஆதார வைத்தியசாலையில் 3 பேரும், வங்காலை மாவட்ட வைத்தியசாலையில் 2 பேரும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருமாக அடங்குவர். மேலும், இந்த மாதம் (செப்டம்பர்) 408 ஆகவும் உயர்ந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இன்று வரைக்கும்77, 927 பேருக்கு கொரோனா முதலாவது தடுப்பூசியும், 59,605 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளதாகவும், 28,868 பி.சீ.ஆர் பரிசோதனைகளும், இந்த மாதம் (செப்டம்பர், 2021) 1,108 பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் பணிப்பாளரின் அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன், முதலாவது தடுப்பூசியை 30 வயதுக்குட்பட்ட 19,842 பேர் பெற்றுள்ளதாகவும், அதாவது 78.2% எட்டியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறான இளைஞர்களின் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் துணிவான முடிவுக்கு எனது பாராட்டுக்கள் என்று பணிப்பாளர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ