
posted 21st September 2021
கிளிநொச்சி மாவட்டத்தில், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், இயக்கச்சியில், ஏ - 9 வீதி அருகே உள்ள, பராமரிப்பு இல்லாத காணியிலேயே, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், கரந்தாய், பளையைச் சேர்ந்து, இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நண்பகல் மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே, மாலை 4 மணியளவில், உறவினர்கள் தேடிச் சென்ற வேளையில், சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்