இலங்கையில் கொரோனா தொற்றின் அப்டேட் 28/09/2021

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 932 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 743 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 56 ஆயிரத்து 87 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் அப்டேட் 28/09/2021

எஸ் தில்லைநாதன்