
posted 9th September 2021

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் விவகாரம், விளையாட்டுத் துறை மற்றும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிக்கும் துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது யாழ்ப்பாண மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் பிள்ளையார் கோவில் குளம், i-Road திட்டத்தின்கீழ் புனரமைக்கப்படும் யாழ் சோமசுந்தரம் வீதி, யாழ் வைத்தியசாலை வீதியில் புனரமைக்கப்படும் வாகன தரிப்பிட அபிவிருத்தி, யாழ் மாநகர சபைக்கான நகர மண்டப அபிவிருத்தி ஆகிய வேலைத்திட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கேட்டறித்து கொண்டார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் அமைச்சருடன் விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்