
posted 7th September 2021

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இரண்டாம் கட்டமாக இன்று செவ்வாய் முதல் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இப்பிராந்தியத்திற்கென கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் தடுப்பூசிகளும் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு இரண்டாம் கட்டதடுப்பூசி ஏற்றல் இடம் பெற்றுவருகின்றது.
ஏற்கனவே முதலாவது தடுப்பூசி ஏற்றாது தவறவிட்டவர்கள், 2 ஆவது டோஸ் ஏற்ற வேண்டியவர்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கென அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பிராந்;தியத்திற்கு தற்சமயம் கிடைக்கப்பெற்று செலுத்தப்பட்டுவரும்,வரும் சினோபாம் கொவிட் - 19 தடுப்பூசிகளுடன் மேலும் ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளதாக, கிழக்குமாகாண ஆளுநரின் கொவிட் தடுப்பு செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.வாசித் ஹ{ஸ்னி தெரிவித்தார்.
இதேவேளை நேற்று 6 ஆம் திகதி திங்கட் கிழமை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 41 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நான்கு கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்முனைப் பிரிhந்தியத்தில் தடுப்பூசி ஏற்றலில் பொது மக்கள் பெரும்ஆர்வமும், ஒத்துழைப்பும் நல்கி வருவதால் கொவிட் -19 வைரஸ் பரவல் நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு வீதமும் குறைந்து வருவதை அவதானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள், தமக்கு விருப்பத் தெரிவான தடுப்பூசி கிடைக்கும் வரை காத்திருக்காமல் முதலில்கிடைக்கும் தடுப்பூசி சிறந்ததும், முக்கியமானதுமெனக் கருதி ஏற்றிக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்