
posted 18th September 2021
யாழ்ப்பாணத்தில் மதுபானம் வாங்க சமூக இடைவெளி பேணாது நீண்ட வரிசையில் காத்திருக்கும் மது பிரியர்கள்!
நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளின் முன்றலில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது. மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை.

எஸ் தில்லைநாதன்