
posted 25th September 2021

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பஸ்ஸில் செல்லும்போது பஸ் அரச மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் அறுவர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த மூவரும் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டனர்.
பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எஸ் தில்லைநாதன்