
posted 2nd September 2021
வடமராட்சி கிழக்கு அம்பனில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (01) அம்பன் பகுதியில் வீடு ஒன்றில் கழிப்பறைக்கு குழி தோண்டும் போது வெடிபொருட்கள் சில தென்பட்டுள்ளன.
இதனையடுத்து அப்பணி நிறுத்தப்பட்டு பருத்தித்துறை பொலிஸருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விஷேட அதிரடிப் படையின் உதவியுடன் அப்பகுதி தோண்டப்பட்ட போது கிளைமோர் குண்டுகள் 4, ஆர்பிஜி குண்டுகள் 6, கைக்குண்டுகள் 38, கிளைமோர் சுவிட்ச் 6, என்பன மீட்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன்