
posted 25th September 2021

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இன்றுமுற்பகல் 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பிர் எம். ஏ. சுமந்திரன், சாணக்கியன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்