அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலா? - றிஸ்லி மயோன் முஸ்தபா
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலா? - றிஸ்லி மயோன் முஸ்தபா

டமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி மயோன் முஸ்தபா அ

அம்பாறை மாவட்டத்திலுள்ள லங்காசதொச நிலையங்களில் அத்தியவசிய உணவுப் பொருட்கள் விற்பனையின்போது இடம்பெறும் முறைகேடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி மயோன் முஸ்தபா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இம்முறைகேடுகள் நிரூபிக்கப்படுமாயின் சம்மந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அமைப்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், பொது மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிலையங்கள் மூலம் நிர்ணய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எனினும், அம்பாறை மாவட்டத்திலுள்ள சில லங்கா சதொச நிலையங்கள் மூலமாக பொது மக்களுக்கு சரியான முறையில் இந்த அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், அவற்றைப் பதுக்கி வைத்து, மொத்த வியாபாரிகளுக்கும் தெரிந்தவர்களுக்கும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் எம்மிடம் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

கூடுதலான டின் மீன்கள், மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம், கோதுமை மா, பால்மா, அரிசி, சீனி போன்ற பொருட்கள், இந்த சதொச நிலையங்களுக்கு நாளாந்தம் வருகின்ற போதிலும், மக்களுக்கு நேரடியாக நிர்ணய விலையில் இப்பொருட்களை வழங்காமல், அவற்றை பதுக்கி வைப்பதும் மொத்த வியாபாரிகள் மற்றும் தெரிந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பதும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் அநீதியாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், உயர் அதிகாரிகள் மூலம் சம்மந்தப்பட்ட சதொச பொறுப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஏதாவது அத்தியாவசிய பொருட்கள் குறைவாக இருப்பின் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்து தருவதற்கு, தான் தயாராக இருப்பதாகவும் சதொச நிலையங்களின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலா? - றிஸ்லி மயோன் முஸ்தபா

ஏ.எல்.எம்.சலீம்