அ.இ.ம.காங்கிரஸின் முன்மாதிரி
அ.இ.ம.காங்கிரஸின் முன்மாதிரி

ஏ.அஸ்பர்

நிந்தவூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.அஸ்பர், தமது பிரதேச சபை உறுப்பினர் பதவியை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் இராஜினாமாச் செய்கின்றார்.

உறுப்பினர் அஸ்பர் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தமது இராஜினாமா தொடர்பில் அறிவித்து விசேட உரையொன்றையும் ஆற்றினார்.

பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட சகலருக்கும் (பட்டியல், மற்றும் தோல்வி கண்ட வேட்பாளர்கள்) மக்கள் சேவையாற்றும் சபை உறுப்பினர் பதவி வழங்குதல் எனும் கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முன்னுதாரண செயற்பாட்டையும், எண்ணக்கருவையும் மதித்து, மற்றொருவருக்கு இடமளிக்கும் வகையிலும், நிந்தவூர் மத்திய குழுவின் கோரிக்கையின் பேரிலும் தாம் உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அஸ்பர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் நிந்தவூர் பிரதேச சபையில் கடந்த 42 மாதகாலமாக கட்சி சார்பில் உறுப்பினராக விருந்து தொடர்ந்த தமது மக்கள் சேவைக்கு ஒத்துழைப்பு நல்கிய சபை உறுப்பினர்களுக்கு நன்றிபகர்ந்த உறுப்பினர் அஸ்பர்,
விசேடமாக தமது சேவையை முன்கொண்டு செல்ல ஊக்குவித்து வந்த சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிருக்கு விசேட நன்றியையும் தெரிவித்தார்.

தலைவர் ரிஷாத் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையிலும், முரண்பாடின்றி தலைவரின் விருப்பையும் முன்மாதிரியையும் வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் அஸ்பர் பதவியை இராஜினாமாச் செய்வது பெரும் பாராட்டுக்குரியதும், தலைமைக்கும், கட்சியின் கொள்கைக்கும் அளிக்கும் பெரும் மதிப்பே இச் செயற்பாடு” எனவும் தவிசாளர் தாஹிர் உரையாற்றுகையில் பெருமிதமாகக் கூறினார்.

அ.இ.ம.காங்கிரஸின் முன்மாதிரி

ஏ.எல்.எம்.சலீம்