227 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்!
227 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்!

வடமராட்சி கிழக்கு கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 227 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அதனை கடத்தி வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(05) அதிகாலை 1. 30 மணியளவில் ஆழியவளை, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றினை கடற்படையினர் நெருங்க முற்பட்ட போது அதில் வந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் அப்படகில் 5 பைகளில் காணப்பட்ட 227.400 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

227 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்!

எஸ் தில்லைநாதன்