
posted 28th September 2021
வாளுடன் ரிக் -ரோக் செயலியில் காணொலி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞனை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அத்துடன், அவரிடமிருந்து குறித்த வாளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம், நாகம்மா வீதியில் வைத்து திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்