17,110 முதலாவது தடுப்பூசி முப்பது வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது - பணிப்பாளர் த.வினோதன்
17,110 முதலாவது தடுப்பூசி முப்பது வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது - பணிப்பாளர் த.வினோதன்

பணிப்பாளர் த.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 28,868 பி.சீ.ஆர் பரிசோதனையில் வியாழக்கிழமை (23.09.2021) வரை 2,073 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இந்நாள் வரை முப்பது வயதுக்கு உட்பட்டோருக்கு 17,110 முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொற்று நோய் தொடர்பாக அவர் நாளாந்தம் வெளியிடும் தனது அறிக்கையில் வியாழக்கிழமை (23) அன்று தெரிவித்திருப்பதாவது;

23.09.2021 அன்று மன்னாரில் 5 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் மன்னார் பொது வைத்தியசாலையில் 3 பேரும், பெரியபண்டிவிரிச்சான் மற்றும் தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒருவருமே கொரோனா தொற்றாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த வியாழக்கிழமை (23) வரை மன்னார் மாவட்டத்தில் 28,868 பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 2,073 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் 2,056 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இந்த மாதம் (செப்பரம்பர்) 389 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொரோனா தடுப்பூசி 75,603ம், இரண்டாவது தடுப்பூசி 59,334ம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றில் முப்பது வயதுக்கு உட்பட்டோருக்கு 17,110 முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

17,110 முதலாவது தடுப்பூசி முப்பது வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளது - பணிப்பாளர் த.வினோதன்

வாஸ் கூஞ்ஞ