
posted 30th September 2021

வைத்திய கலாநிதி ரூபன் லெம்பேட்
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மற்றும் செல்லாத விஷேட தேவையுடைய பிள்ளைகளை வெள்ளிக்கிழமை (01.10.2021) அழைத்து வரும்படி பெற்றோர் வேண்டப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ரூபன் லெம்பேட் விடுத்திருக்கும் வேண்டுகோளில்;
01.10.2021 (நாளை) அன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஒரு மணியளவில் முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மற்றும் பாடசாலை செல்லாத விஷேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நீண்டகால நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் பெற்றோர்கள் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அன்றைய தினம் இச் சிறார்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தேற்றுவதற்கு முன்னரான தேவைபாடுகளை அறிந்து கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை நடாத்துவதற்கே இவ்வேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து இவர்களுக்கான தடுப்பூசி பிறிதொரு தினத்தில் ஏற்றப்பட இருப்பதாகவும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ரூபன் லெம்பேட் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ