
posted 28th September 2021

ஸ்ரைல் மோகத்தில் தனது நாக்கை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாகப் பிளந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரில் பச்சை குத்தும் கடையொன்றை நடத்தி வரும் இளைஞரே இவ்வாறு தனது நாக்கை இரண்டாகப் பிளந்துள்ளார். இதற்காக காலிக்கு சென்று அவர் சத்திர சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அத்துடன் இது தொடர்பான படம் ஒன்றை அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிந்துள்ளார்.
சமூகத்துக்கும், கலாசாரத்துக்கும் ஒவ்வாத தவறான - சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட இந்த இளைஞரின் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன் ஸ்ரைல் மோகத்தில்