வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவரை அங்கஜன் இராமநாதன் சந்தித்தார்

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட செல்வேந்திராவினை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

"கிராமத்துடனான உரையாடல்" மக்கள் சந்திப்பை பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் இன்று வியாழக்கிழமை (30) அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டிருந்த போது நகர சபைத் தலைவரின் அழைப்பையேற்று அவரது இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நகர சபைத் தலைவருக்கு தனது வாழ்த்துக்களை அங்கஜன் இராமநாதன் தெரிவித்துக் கொண்டார்.

வல்வெட்டித்துறை பகுதியின் அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பின்போது இருவரும் கலந்துரையாடினர்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவரை அங்கஜன் இராமநாதன் சந்தித்தார்

எஸ் தில்லைநாதன்