posted 14th September 2021
தென்மராட்சி வரணியில் கடை உரிமையாளர் ஒருவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு வரணி இயற்றாலை பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பருத்தித்துறை வீதி, வரணியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளர் மீது கொட்டன் பொல்லுகளோடு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி வீடு புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அவரது தொலைபேசியையும் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது.
இதையடுத்து கடை உரிமையாளர் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாமம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் ஏனையோரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்