
posted 7th September 2021
மன்னார் முசலி மருத்துவ அதிகாரி பிரிவில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 102 தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 437 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 102 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 12 பேர், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 9 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 5 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 2 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 2 பேர், யாழ். மாநகரம், சாவகச்சேரி, சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவுகள், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை என்பவற்றில் தலா ஒருவர் என யாழ். மாவட்டத்தில் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் முசலி மருத்துவ அதிகாரி பிரிவில் மட்டும் 24 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர், பளை பிரதேச மருத்துவமனை, பொது மருத்துவமனை, பளை மருத்துவ அதிகாரி பிரிவு என்பவற்றில் தலா ஒருவர் என 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
மல்லாவி ஆதார மருத்துவமனையில் 6 பேர், மாந்தை கிழக்கு மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் 2 பேர், பொது மருத்துவமனையில் இருவர் என 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வவுனியா பொது மருத்துவமனையில் 8 பேர், பூவரசங்குளம் பிரதேச மருத்துவமனை, மாமடு பிரதேச மருத்துவமனை என்பவற்றில் தலா ஒருவர் என வவுனியா மாவட்டத்தில் 10 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
தவிர, இரணைமடு விமானப்படை முகாம், முழங்காவில் கடற்படை முகாமில் தலா ஒருவர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்