
posted 17th September 2021
யாழ்.மாவட்டத்தில் 26 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை48 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் 278 பேருக்கு நேற்று வியாழக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தில் 26 பேர் - யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 03 பேர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேர் - மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 05 பேர், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஒருவர்.
வவுனியா மாவட்டத்தில் 10 பேர் - செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 07 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், வவுனியா விமானப்படை முகாமில் ஒருவர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்.
உயிரிழந்தவர்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பெறப்பட்ட அவருடைய பிசிஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
S.சண்முகநாதன் (வயது 73) என்பவரே உயிரிழந்தவராவார்.

எஸ் தில்லைநாதன்