மன்னாரில்  சர்வதேசத்துக்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் இல்லங்களில் அமைதியாக நடைபெற்றது

திங்கள் கிழமை (30.08.2021) சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நினைவுகூரப்பட்டது. இத் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் மாலை வேளையில் தங்கள் இருப்பிடங்களில் இருந்தவாறு அனுஷ்சரித்தனர்.

கொரோனா தொற்று நோய் காரணமாக இலங்கை அரசால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள் தங்கள் இல்லங்களில் தீபங்கள் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர்பாக இறை வேண்டுதல் வேண்டியும் சர்வதேசத்துக்கான கவனயீர்ப்பு நிகழ்வுகளையும் மன்னாரில் அமைதியான முறையில் நடாத்தினர்.

மேலும் இந்த அனுஷ்டிப்பானது தங்கள் உறவுகளுக்கான நிலைப்பாடுகளை அரசாங்கம் தக்க பதில்களை வெகு விரைவில் தர வேண்டும் என்றும், சர்வதேசமும் இதை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என்ற நோக்குடன் முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.

அதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் தலையிட்டு யுத்த காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் கடத்தப்பட்ட மற்றும் சரணடைந்த தங்கள் உறவுகளுக்கு நியாயத்தை பெற்றுதர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையிலேயே இந் நிகழ்வு இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளோடு இணைந்து மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையமும் இணைந்து தீபமேற்றி குறித்த நிகழ்வுகளில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில்  சர்வதேசத்துக்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் இல்லங்களில் அமைதியாக நடைபெற்றது

வாஸ் கூஞ்ஞ)