
posted 17th September 2021
மன்னார் மாவட்டத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டிவிட்டதென மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதனின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (15.09.2021) 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இப் பத்துப் பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் நாவல்ரும், விடத்தல்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும் நபர்களும், மன்னாரில் ஒருவரும், மடுப் பகுதிகளில் ஒருவருமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 28,730 பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 2003 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் மட்டும் மேற்கொள்ளப்பட்ட 970 பி.சீ.ஆர் பரிசோதனையில் 319 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இதுவரைக்கும் 23பேர் கொரோனாவினால் இறந்துள்ளனர். இன்றைய தினம் (15) 56 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லையென பணிப்பாளர் த.வினோதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ