posted 27th September 2021
பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (27) பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டனர்.
நாடளாவியரீதியில் ஆறு அம்சக் கோரிக்கைகயினை முன்வைத்து தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த தொழில் சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுகின்றனர்.
கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், இந்த காலத்தில் மேலதிக நேர விசேட கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல், வடமாகாண சுகாதா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல், போன்ற கோரிக்கையினை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

எஸ் தில்லைநாதன்