
posted 23rd September 2021
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலயம்மீது இலங்கை விமானப் படை நடத்திய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் 21.09.2021 முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை முன்னெடுக்கப்ப்ட இந்த நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் 22ஆம் திகதி நண்பகல் 12. 30 மணியளவில் மாணவர்கள் தமது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை இலங்கை விமானப் படையின் புக்காரா விமானம் நடத்திய குண்டுவீச்சில் 21 மாணவர்கள் பலியாகினர். இதன்போது 18 பொது மக்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். பொது மக்களும் 18 பேர் கொல்லப்பட்டிருந்த சம்பவத்தை சிவாஜிலிங்கம் அவர்கள் நினைவுகூர்ந்திருந்தார்

எஸ் தில்லைநாதன்