தொண்டமனார் சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது
தொண்டமனார் சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வடமராட்சி பருத்தித்துறை - கொடிகாமம் (759) தனியார் பஸ் சேவைச் சங்கம் சார்ந்த - சாரதி,நடத்துனர்களின் குடும்பங்களுக்கு அத்தியவசியமான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. -

கொவிட் - 19 இடர் கால நிவாரண உதவித் திட்டத்திற்கு அமைவாக பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலாளர்களின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட வடமராட்சி தனியார் பஸ் சேவைச் சங்கம் பருத்தித்துறை - கொடிகாமம் சார்ந்த ( 759 )சாரதிகள், நடத்துனர்களைச் சேரந்த 35 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 75000 உரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்கள் ஆன அரிசி,மா, சீனி , பருப்பு உள்ளடங்கலாக வழங்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வடமராட்சி - பஸ் சேவைச்சங்கம் 759 பாதை இலக்க நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

தொண்டமனார் சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது
தொண்டமனார் சந்நிதியான் ஆச்சிரமத்தால் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது

எஸ் தில்லைநாதன்