
posted 30th September 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் 'சுபீட்சத்தின் நோக்கு' என்ற திட்டத்தின்கீழ் 'சௌபாக்கிய வாரம் 3ம் கட்ட வேலைத்திட்டத்தின் ஊடாக சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 42 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் புதன் கிழமை (29.09.2021) பிற்பகல் நானாட்டான் பிரதேச பகுதியில் வழங்கி வைக்கப்பட்டது
இதில் விக்ஷேட வீட்டுத். திட்டம் தொழிற்பயிற்சி லொத்தர் தெரிவு மற்றும் கடன் உதவிகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டது
மேலும் பிரதேச சௌபாக்யா வாராந்த சந்தை அமைக்கப்பட்டு உள்ளூர் உற்பத்திக்கான பனைப் பொருட்கள் மரக்கறி வகைகள் போன்றன விற்பனை செய்யப்பட்டது
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த ராசா, மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. மஹேஷ்வரன் சமுர்த்தி பணிப்பாளர் ஜனாப். ஐ. அலியார், நானாட்டான் சமூர்த்தி தலைமை பீட முகாமையாளர் திரு. பிர்தௌஸ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செல்வி. தயானந்தன் திவாஹரி மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ