
posted 26th September 2021

சிவஞானம் சிறிதரனின் (பா.உ.) அலுவலகமான அறிவகம் பொலிசாரின் முற்றுகையில்
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.
அலுவலகத்துக்கு வந்து சென்ற அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அலுவலகத்துக்கு உள்ளே எவரையும் செல்லவிடாமல் பொலிஸார் தடுத்தனர் என்றும், கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்க உள்ளே சென்றபோது பொலிஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர் எனவும் கூறப்பட்டது.
குறித்த பொலிஸாரிடம் ”ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்”? அலுவலகத்துக்கு வருவோருக்கு தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று சிறிதரன் எம்.பி கேட்டபோது, இது”மேலிடத்து உத்தரவு என்று பதில் பொலிஸார் கூறினர் என தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்