கோவிட் தொற்று அப்டேற் (27/09/2021)

யாழ்ப்பாணத்தில் 21 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 26 தொற்றாளர்கள் இன்று திங்கட்கிழமைஅடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனையிலேயே இந்த புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பபட்டனர்.

மேலும், யாழ். போதனா மருத்துவமனையில் 16 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 3 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 2 பேர் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 2 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தவிர, வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

கோவிட் தொற்று அப்டேற் (27/09/2021)

எஸ் தில்லைநாதன்