
posted 29th September 2021
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசா செல்வராணி (வயது 69) கிளிநொச்சியைச் சேர்ந்த கணபதி சின்னம்மா (வயது 87) ஆகியோரே உயிரிழந்தவர்கள் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்