
posted 24th September 2021
யாழ். மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று வியாழக்கிழமை 156 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன் அடிப்படையில்;
யாழ்.போதனா மருத்துவமனையில் 06 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 04 பேர், பருத்தித்துறை ஆதாரமருத்துவமனையில் 02 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 02 பேர், பலாலி விமானப்படை முகாமில் 03 பேர் என 23 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்ட மருத்துவமனையில் 05 பேர், பூவரசங்குளம் மருத்துவமனையில் ஒருவர் என வவுனியாவில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

எஸ் தில்லைநாதன்