
posted 16th September 2021

வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் கொரோனாவுக்கான இரண்டாவது தடுப்பூசிகள் போட தவறியவர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் வெளியில் செல்வோர் மீது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என புதன்கிழமை (15.09.2021) முதல் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதன் அதிகாரி வைத்திய கலாநிதி ரூபன் லெம்பேட் இப் பகுதி மக்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25.08.2021 அன்றும் அதற்கு முன்னைய தேதிகளிலும் தமக்குரிய முதலாவது பைசர் தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டு இதுநாள் வரையில் தங்களுக்கான இரண்டாவது பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள தவறியவர்களுக்கு இறுதி சந்தர்ப்பமாக எதிர்வரும் 20.09.2021 திங்கட்கிழமை அன்று காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை முருங்கன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இத் தடுப்பூசியானது வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எந்தவொரு தடுப்பூசியினையும் இதுநாள் வரையில் பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட எவராயினும் தங்களுக்கான சினோபாம் தடுப்பூயினையும் தமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் இத் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தலையாய கடமையாக இருப்பதால் இவ் வாய்ப்பினையை தவறவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டுமாகில் இத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 0770879680, 0232050389 ஆகும்.

வாஸ் கூஞ்ஞ