
posted 14th September 2021
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
B.சரஸ்வதி (வயது 84), ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உயிரிழந்த வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வள்ளி நாகம்மா (வயது 78) என்பவரு உயிழந்தவர் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்