
posted 23rd September 2021
யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சுப்பிரமணியம் ஜெகதீஸ்வரன் (வயது-70), அரியமலர் குணரட்ணம் (வயது 66)ஆகியோருக்கும்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், ஏ.இராசதேவி (வயது 58) என்பவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த உத்தியோகத்தர் ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர் என்றும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 16 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன் தினம் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்