
posted 18th September 2021
கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் விபத்தினாலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் முடிவாகியுள்ளது.
சாவகச்சேரி நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட பணிப்புக்கு அமைய யாழ்.போதனா வைத்தியசாலை மரணவிசாரணை நிபுணர் மேற்கொண்ட பரிசோதனையில் அடிப்படையில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவருடைய இறுதி நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக தமது பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரால் பொலிஸ் நிலையில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்