
posted 13th September 2021

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மலரஞ்சலி செலுத்தினார்.
தென்மராட்சி வெள்ளாம் போக்கட்டியில் உள்ள அவரின் வீட்டிற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாவகச்சேரி அமைப்பாளர் சயந்தன் சகிதம் நேரடியகச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறினார்.
மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் தசையழிவு நோய்த்தாக்கத்தினால் சக்கரநாற்காலியோடு முடங்கியிருந்த நிலையிலும் தனது திறமையாலும் எழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்