இந்திய படகுடன் மோதியதில் ஒரு படகுடன் இரு மீனவர்களையும் காணவில்லை

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்திய மீனவர் படகு மோதியதில் படகு சேதமடைந்த நிலையில் இருவர் கரை சேர்ந்ததுள்ளனர். மற்றுமொரு படகும் இரு மீனவர்களையும் காணவில்லை என சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் கடலிற்கு தொழிலிற்காக சென்ற படகை எல்லை தாண்டிய இந்திய மீன்பிடி படகு மோதியதில் ஒரு படகு பலத்த சேதமாகியிருப்பினும் சேதமான ஒரு படகில் சென்ற இருவரும், சேதமடைந்த படகுடன் கரை திரும்பியுள்ளனர்.

மேலுமொரு படகு கடலில் மீன்பிடித்தொழிலுக்குச் சென்ற நிலையில் அதில் சென்ற இரண்டு பேரையும் கடலில் காணவில்லை என்றும் தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகவன் மற்றும் வளயா எனும் இருவருமே இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர் சங்க தகவல்கள் தெரிவிப்பதுடன், மீனவர்களால் தேடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது கடற்படை தேடிவருகின்றனர்.

காணாமல்ப் போன மீனவர்களது வலைகள் மாத்திரம் கடலில் படுக்க விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய படகுடன் மோதியதில் ஒரு படகுடன் இரு மீனவர்களையும் காணவில்லை

எஸ் தில்லைநாதன்