
posted 9th September 2021

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளுகின்றார் என இவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழ். விஜயம் அமைகின்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ