அடையாள வேலை நிறுத்தம்
அடையாள வேலை நிறுத்தம்

நாட்டில் இன்று புதன் கிழமை சுகாதார சேவை ஊழியர்கள் ஒரு மணி நேர அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஏழு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து சுகாதார ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அடையாள பணி பகிஷ்கரிப்பில் நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளினதும் பணியாளர்களான சுகாதார வைத்தியசாலைகளிதும் பணியாளர்களான சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை இந்த அடையாள பணி பகிஷ்கரிப்பு இடம் பெற்றது.

கொவிட் - 19 விஷேட கொடுப்பனவை (அலவன்ஸ் 7500 ரூபாவை) தொடர்ந்து வழங்கு, சுகாதார துறையைத் தேசிய மயமாக்கு, விடுமுறை, ஓய்வுநாள் கொடுப்பனவைக் குறைக்காதே, ஆளணிப்பற்றாக் குறையை நிவர்த்தி செய், கொவிட் கால சேவைக்கால சேவைக்கான விடுமுறையை சகல சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் வழங்கு என்பன போன்ற பல கோரிக்கைகளைமையப்படுத்திய வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை அடையாள பணி பகிஷ்கரிப்பிலீடுபட்ட சுகாதார சேவையாளர்கள் ஏந்தியிருந்ததுடன் அவற்றைக் கோஷமாகவும் எழுப்பினர்.

அரச தாதிய உத்தியோகத்தர் சங்க, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.ஐ.உமரலியின் வழி நடத்தலில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அடையாள வேலை நிறுத்தம்

ஏ.எல்.எம்.சலீம்