
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கு மாகாண உள்ளூர் உற்பத்தி பொருள்களின் கண்காட்சி ஆரம்பம்
வடமாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாறி வரும் சுற்றுலா வளர்ச்சியில் வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி நேற்று (30) யாழ் மத்திய கலாசார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஆ. பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு கண்காட்சிக் கூடங்களை அங்குராப்பணம் செய்துவைத்தார்.
இக் கண்காட்சியில் 43 உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி செய்துள்ள பொருட்களின் கூடாரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 உணவுசார்ந்த பொருட்களும், 25 கைவினை சார்ந்த உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம், மற்றும் உள்ளிட்ட துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)