
posted 5th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கு ஆளுநர் இந்தியத் தூதுவர் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று (04) புதன் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். இதேவேளை, இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும், வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என்று கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)