
posted 6th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் கண் நோய்
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கண் நோய் வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் என பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயிலில் செல்வதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)