யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இருவருக்கு விளக்கமறியல்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மூலவை சந்தியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இரு நாட்களுக்கு முன்னர், இளைஞர் ஒருவரின் 33ஆவது பிறந்தநாள் நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அந்த பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.

மத்திய பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த இந்த கும்பல் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருப்பதாக குறிப்பிட்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்துமாறு மிரட்டியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காணொலிகள் ரிக்ரொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக ஒன்றுகூடியமை, சட்டவிரேதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று ஞாயிறு (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தினமும் சட்டவிரோத ஒன்றுகூடல் நடப்பதாக சுட்டிக்காட்டிய நீதிவான் பொலிஸார் தமது கடமையை செய்வதில்லையென்றும் கண்டித்தார்.

யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இருவருக்கு விளக்கமறியல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)