முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் 3ஆவது மாநாடு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் 3ஆவது மாநாடு

ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப்பின் "முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு - 2023" "குடும்பம் எங்கள் விழி ஆற்றல் எங்கள் வழி" எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி சீஐஜி மண்டபத்தில் இடம் பெற்றது.

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் ஸ்தாபகத் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் அறுபதுக்கு மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பேராதனை வளாக மெய்யியல்துறை ஓய்வுநிலைத் தலைவரும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் காத்தான்குடி நகரசபை செயலாளர் றிப்கா ஷபீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இவ்விழாவில், முதல் அமர்வு பெண்களுக்காக மட்டும் இடம்பெற்றது.

இரண்டாம் அமர்வில் இருபத்திரெண்டு முஸ்லிம் பெண்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய "இமயம் தழுவும் இறக்கைகள்" கவிதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கவிதை, சிறுகதை மற்றும் ரமழான் மாதப் போட்டிகளில் வெற்றியீட்டியோர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது.

மூன்றாவது அமர்வில் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நெறியாளர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இப்பெரும் விழாவில், கல்விமான்கள், கலைஞர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் 3ஆவது மாநாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)