
posted 1st October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்கப்படவேண்டும்
அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நீதிபதி சரவணராஜாவிற்கான நீதியையும், நிவாரணத்தையும் வழங்குவதற்கும் நீதித்துறையில் சுயாதீனத் தன்மையினையும், நம்பகத்தைன்மையையும் உறுதி செய்வதற்குமான செயற்பாடுகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நீதிபதியொருவர் நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது ஏற்பட்ட கரும்புள்ளி எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி உள்ளக விசாரணையின் மூலம் கிடைக்காது என்பதை இது உறுதி செய்துள்ளது எனவும், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)