முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கத்தமுல் குர்ஆன்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கத்தமுல் குர்ஆன்

முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா மரணித்து 40 நாட்கள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட கத்தமுல் குர்ஆன் நிகழ்வு அன்னாரால் நிர்மாணிக்கப்பட்ட சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும், கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபருமான எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி எம்.எம். றியாஸ், மெளலவி எம்.எம். அஹமட் ஆகியோர் கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் பெயரில் சூறத்துல் யாஸின் குர்ஆன் பிரதியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்ப் பிரமுகர்கள், மத்ரஸா மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தினர் கலந்து கொண்டனர்.

இதேவேளை அன்றைய தினம் கொழும்பிலும் கத்தமுல் குர்ஆன் நிகழ்வு ஒன்று அன்னாரது குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள், சிவில் அமைப்பினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கத்தமுல் குர்ஆன்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)