
posted 27th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்த யாழில் தீப்பந்த போராட்டம்!
யாழ். மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அமைதிவழி தீப்பந்த போராட்டம் நேற்று வியாழன் (26) மாலை முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அலுவலத்தின முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி அங்கிருந்து மருதடி வீதியுடாக - பொஸ்கோ வீதியை அடைந்து அங்கியிருந்து இளம் கதிர் சனசமூக விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.
யாழ்.மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளர் வெற்றிவேல் ஜெயேந்திரன், உதவி அமைப்பாளர் சுப்பிரமணியம் சிறிகாந்தராசா ஆகியோர் தலைமையில் இப் தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது இதில் உள்ளூர் மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)