
posted 4th October 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாம்பழ அறுவடை
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது.
சுமார் 100 இற்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் (நிர்வாகம்) மற்றும் ஏனைய அதிதிகளாக முன்னாள் பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. கமால் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.ரீ.எம். அனப் உறுப்பினர்களான ரீ.எம். இர்பான் ஜே.எம். ஜெஸீல் ஐ.எம். சமீறுல் இலாஹி பழைய மாணவர் செயலாளர் எஸ்.எச் எம். அஜ்வத் எம்.எம். முஹ்ஷீன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.றிஸான் அமீர் ஏ பாறூக் முன்னாள் நாவதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம். பி. அப்துல் றஹீம் பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)