மாதவணை மயிலத்தமடு  பிரச்சினை தீர்வுக்குரிய முயற்சி பாராட்டுக்குரியதே

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மாதவணை மயிலத்தமடு பிரச்சினை தீர்வுக்குரிய முயற்சி பாராட்டுக்குரியதே

மாதவணை மயிலத்தமடு பிரச்சினை தீர்வுக்கு எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டுக்குரியதே என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெத்தினம் மகிழச்சி தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் மாதவணை, மயிலத்தமடு மேச்சற்தரை காணி விடயம் தொடர்பாக கால்நடைகளுக்குரிய மேச்சற்தரைக் காணிகளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையின சிங்கள இனத்தவர்களால் விவசாயம் செய்வதற்காக (மறைமுகமான சிங்கள திட்டமிட்ட குடியேற்றம்) செய்து வந்துள்ள நிலையில் மாதவணை, மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்களினால் ஆட்சேபனை தெரிவித்து கால்நடைகளுக்குரிய மேச்சற்தரைக் காணிகளை விடுவித்துத் தருமாரு கோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒரு மாதத்தையும் தாண்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோரிக்கையை முன் வைத்த சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அரசியற்கட்சிகள், மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அபிமானிகள் சங்கத்திற்கு ஆதரவுகளைத் தெரிவித்து வந்த நிலையில் ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினம் ஒரு முடிவை எட்டியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் மக்கள் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர், ஏனைய அரச திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களை ஜனாதிபதி அழைத்து அவர் தலைமையில் கலந்துரையாடல் நடாத்தி ஒரு முடிவு எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைப் பண்ணையாளர்களின் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வெகுஜனரீதியான கவன ஈர்ப்பு போராட்டமானது ஒரு முடிவை எட்டுவதற்கு வழி வகுத்துள்ளது. இதை தலைமை தாங்கி நடாத்திய கால்நடைகளின் சங்கத்தினருக்கும், இக்குரலை ஓங்கி ஓலிக்க வைத்த வெகுஜனத்திற்கும், பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும், இதை வெளியில் வெளிக்காட்டிய ஊடகத்துறையினருக்கும், தொழிற்சங்கங்கள், ஏனைய அமைப்புகள், கால்நடைப் பண்ணையாளர்களின் குடும்பங்கள், அரசியற்கட்சிகள், ஏனைய மாவட்ட,மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆனால், கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டம் முடிந்தவுடன் இப் பொதுப் பிரச்சினையை இம் மாவட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெகுஜன வாயிலாக ஊடகத்துறைக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும்.

இதேவேளை இன்னும் கூட அப்பகுதியில் வேளாண்மை செய்கைக்குரிய நெல் விதைக்கப்படுகின்றன. ஒரு சிலர் கண்டிப்பாகவும் நடந்து கொள்கின்றனர். பிரதேச செயலாளர் உத்தியோக பூர்வமாக கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற கூட்டத்தை அறிவித்திருந்தாலும் அப்பகுதியில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் கால்நடைப் பண்ணையாளர்கள் கால்நடைகளை அங்கு கொண்டு செல்ல முடியும். கால்நடைப் பண்ணையாளர்கள் என்ன செய்வது என்பதை தீர்மானிப்பார்கள். இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இன்றும், நாளையும் பங்கு கொள்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாதவணை மயிலத்தமடு  பிரச்சினை தீர்வுக்குரிய முயற்சி பாராட்டுக்குரியதே

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)